பொது செய்தி

இந்தியா

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'

Updated : அக் 16, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜபல்பூர்:மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் கால்நடைகளுக்கான பிரத்யேக சாக்லேட்டை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துஉள்ளனர். மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நாநாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இதன் முடிவில் பால் உற்பத்தியை
 பால் உற்பத்தி, அதிகரிக்க கால்நடைகள், 'சாக்லேட்'

ஜபல்பூர்:மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் கால்நடைகளுக்கான பிரத்யேக சாக்லேட்டை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துஉள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நாநாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இதன் முடிவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சாக்லேட்டை தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலையின் துணை வேந்தர் திவாரி கூறியதாவது:'மல்டி வைட்டமின்' புரதச் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட்டை தீவனம் இல்லாத நேரங்களில் கால்நடைகளுக்கு வழங்கலாம் அல்லது இதர தீவனங்களுடன் சேர்த்தும் கூட இதை வழங்கலாம்.இந்த சாக்லேட்டுகளை உண்ணும் கால்நடைகள் அதிக பால் சுரக்கும்; இது, இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

மாநில கால்நடை பராமரிப்பு துறைக்கு உதவி வரும் எங்கள் பல்கலைக்கழகம் விரைவில் மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த சாக்லேட்டு களை வினியோகிக்கும் பணிகளை துவங்கும். 500 கிராம் எடையிலான ஒரு சாக்லேட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட உள்ளது.இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய, மாநில அரசிடம் அனுமதி கோரப் பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் அது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202115:31:25 IST Report Abuse
 ஆதவன், சென்னை டயப்படீஸ் நோயாளிகள் 50 கோடிகளாக அதிகரிக்க அற்புதமான திட்டம்..
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-அக்-202115:03:30 IST Report Abuse
raja ஏன்யா இப்படி.... மறுபடியும் எங்க யாதவ் சாக்லேட் ஊழல் செய்து மருத்துவமனையில் இருக்கணுமா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X