'கோவில்களை சூறையாடியோருக்கு தண்டனை'

Added : அக் 15, 2021
Share
Advertisement
டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்து கோவில்கள் மத வெறியர்களால் சூறையாடப்பட்டன. துர்கா பூஜையை சீர்குலைக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், போலீசாருக்கும், வன்முறைக் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகமுள்ள 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில்

டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்து கோவில்கள் மத வெறியர்களால் சூறையாடப்பட்டன.

துர்கா பூஜையை சீர்குலைக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், போலீசாருக்கும், வன்முறைக் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகமுள்ள 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் உள்ள தாகேஷ்வரி கோவிலுக்கு சென்று, பக்தர்களுக்கு துர்கா பூஜை வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் ஷேக் ஹசீனா பேசியதாவது:வன்முறை சம்பவங்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானோர் ஒருவரையும் விட மாட்டோம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X