காங். தலைவர் பதவி ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சித்து

Updated : அக் 15, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
அமிர்தசரஸ்: பஞ்சாப் காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து, இன்று (அக். 15) ராஜினாமாவை திரும்ப பெற்றார்.அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார். சித்து தலைமையை ஏற்க விரும்பாத அமரீந்தர் சிங்
ராஜினாமா கடிதத்தை  வாபஸ் பெற்றார் சித்து:

அமிர்தசரஸ்: பஞ்சாப் காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து, இன்று (அக். 15) ராஜினாமாவை திரும்ப பெற்றார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சித்து, பஞ்சாப் காங்., தலைவராக நியமிக்கப்பட்டார்.

சித்து தலைமையை ஏற்க விரும்பாத அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் கடந்த மாதம் மாநில காங்., தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை காங்., மேலிடம் ஏற்கவில்லை.
இந்த சூழ்நிலையில் இன்று ( அக்.15) காங். பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் உள்ளிட்ட நிர்வாகிகள், , சித்துவை சந்தித்து சமரசம் செய்தனர். இதையடுத்து சித்து தனது முடிவை மாற்றிக்கொண்டார். ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து மாநில காங்., தலைவராக மீண்டும் தனது பணியை தொடர விருப்பம் தெரிவித்தார்.தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்தித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
16-அக்-202108:12:50 IST Report Abuse
M S RAGHUNATHAN இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன.
Rate this:
Cancel
16-அக்-202106:55:54 IST Report Abuse
ravi chandran தெரியும் நீ டுபாக்கூர்.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
16-அக்-202106:22:53 IST Report Abuse
S. Bharani என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒன்னுமே புரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X