உலகின் பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை மாற்ற... சூளுரை! பாதுகாப்பு நிறுவனங்களை துவக்கி வைத்து பிரதமர் பேச்சு

Updated : அக் 17, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி :''சுதந்திரத்திற்கு பின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படாததால், ஆயுதங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சுயசார்பு இந்தியா கொள்கையின் கீழ், உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக நாட்டை மாற்றுவதையே லட்சியமாக நிர்ணயித்துள்ளோம்,'' என, பிரதமர் மோடி பேசினார். நாட்டின் ராணுவ தளவாடங்கள்
ராணுவ சக்தி, இந்தியா,பாதுகாப்பு நிறுவனங்கள், மோடி

புதுடில்லி :''சுதந்திரத்திற்கு பின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படாததால், ஆயுதங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது சுயசார்பு இந்தியா கொள்கையின் கீழ், உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக நாட்டை மாற்றுவதையே லட்சியமாக நிர்ணயித்துள்ளோம்,'' என, பிரதமர் மோடி பேசினார். நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில் 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஏழு பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன.




நம்பிக்கை



இந்த ஏழு நிறுவனங்களை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:நாட்டின் பாதுகாப்பு துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு போன்றவை அதிகரித்து உள்ளன.
சுதந்திரம் பெற்ற பின் முதல்முறையாக முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஒற்றை சாளர அமைப்பு முறை பின்பற்றப்படுகிறது. நம் ஆயுத தொழிற்சாலைகளின் வலிமை, இரண்டாவது உலகப் போரின் போது வெளிப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் ஆயுதங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


புதிய எதிர்காலம்



தற்போது சுயசார்பு இந்தியா கொள்கையின் கீழ், நம் நாட்டை சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதும் லட்சியமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த தீர்மானத்தையும், 'மேக் இன் இந்தியா' என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி நாடு செல்கிறது. புதிய எதிர்காலத்தை நிர்ணயிக்க, இந்தியா உறுதியுடன் உள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் உள்ள திட்டங்களை, நாட்டின் ௭௫வது சுதந்திர ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.ஏழு பாதுகாப்பு நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எதிர்கால தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


'இந்தியா மீது உலகம் நம்பிக்கை'



குஜராத்தில் உள்ள சூரத்தில், சவுராஷ்டிரா படேல் சேவா சமாஜத்தால் கட்டப்பட உள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு ௭௫வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வருகிறது. இந்த காலத்தில் தேசப்பற்றை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றிய தலைவர்களை, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம்.பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு என்ற பலமோ, ஜாதி பலமோ, அரசியல் பலமோ, பண பலமோ எனக்கு இல்லை. ஆனால், மக்களின் ஆசிர்வாதத்தால் குஜராத் முதல்வராக 2001ல் பதவியேற்றேன். மக்களின் ஆசிர்வாதம் தான், ௨௦ ஆண்டுகளுக்கு மேலாக எந்த இடைவெளியும் இன்றி குஜராத் மக்களுக்கும், அதன்பின் ஒட்டு மொத்த நாட்டுக்கும், என்னை தொடர்ந்து சேவை செய்ய வைத்துள்ளது.'மத நம்பிக்கையும், ஜாதி பற்றும் நம் வளர்ச்சிக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது. பாரத அன்னையின் குழந்தைகளான நாம், நாட்டின் மீது பற்று வைத்து அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.

கொரோனா நெருக்கடிக்கு பின் பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா மீண்டும் இருக்கப் போகிறது என, சர்வதேச அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-அக்-202117:57:47 IST Report Abuse
Vittalanand மோடி தன் அரசியல் வாரிசை அறிவித்து இப்போதே தயார் செய்து வேண்டும். நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அருண் ஜெட்லீ மற்றும் மனோஜர் பரிகஜார் காலமாஜிவிட்டாட்கள். புதிய தலைமுறை யில் ஜெய்சங்கர் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார். ஆனால் டெல்லி அரசில் தமிழர்கள் பிரதமராவது கடினம்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
16-அக்-202116:24:23 IST Report Abuse
GANESUN அவ்வளவு கஷ்டம் இருந்தா சௌதியிலேயே குடியுரிமை வாங்கி வாழ வேண்டியது தானே.. நீங்கள்லாம் எப்படி பட்டவனுங்கன்னு தெரிஞ்சு எந்த வளைகுடா நாடும் குடியுரிமை குடுப்பதில்லை. விசா முடிசஞ்சதும் வேல செஞ்சி வெட்டி முறிச்சது போதும்னு இடத்த காலி பண்ன சொல்ராங்க.. பேச்சப்பாரு..
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-அக்-202115:22:16 IST Report Abuse
ஜெயந்தன் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திட்டாரு......இப்போ ராணுவம் தான் பாக்கி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X