அரசியல் செய்தி

தமிழ்நாடு

23 மீனவர்களை விடுக்க கோரி பிரதமருக்கு கடிதம்

Added : அக் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:'இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11ம் தேதி, 23 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், பாரம்பரிய மீன்பிடி தளமாக உள்ள பருத்தி துறை
 23 மீனவர்களை விடுக்க கோரி பிரதமருக்கு கடிதம்

சென்னை:'இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11ம் தேதி, 23 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், பாரம்பரிய மீன்பிடி தளமாக உள்ள பருத்தி துறை அருகே, 13ம் தேதி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.காரை நகர் கடற்படை தளத்திற்கு, அவர்கள் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான, நீண்ட கால பிரச்னையில் உடனடியாக பிரதமர் தலையிட வேண்டும். இப்பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க உறுதியான வழிமுறைகளை காண வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள, 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை அதிகாரிகளிடம் இப்பிரச்னையை தீர்க்கமான முறையில் எடுத்து செல்ல, வெளியுறவு அமைச்சகத்திற்கு, பிரதமர் வலியுறுத்த வேண்டும். இப்பிரச்னையில் உரிய வழிமுறைகளை கையாண்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
16-அக்-202118:49:20 IST Report Abuse
venkates PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-அக்-202117:00:07 IST Report Abuse
Sanny இதுக்கெல்லாம் காரணம் மீன் பிடி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா? இவர் இலங்கை விடுதலைப்புலி இயக்கத்தின் வேறு இயக்கமாக இருந்தவர் சூளைமேட்டில் துப்பாக்கி சூடு நடாத்தி, தமிழ்நாடு பொலிஸாரால் தேடப்பட்டவர். இவரை கட்டுமரம் தான் காப்பாற்றினார் அந்த வழக்கில் இருந்து. இப்போ அதே அவர் வைத்தார் ஆப்பு, அண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் இந்திய மீனவர்களிடம் இருந்து இலங்கை மீனவர்களை பாதுகாக்க, இலங்கை மீனவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கணும் என்றுசொன்னவர். எப்படி வரளத்த கடா மார்பில் பாய்ந்தது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
16-அக்-202112:59:24 IST Report Abuse
raja நிரந்தர தீர்வுன்னா கட்டுமரம் தான் பண்ணின ஊழலின் தண்டனையிலிருந்து தப்பிக்க கொடுத்த கச்சத்தீவை அவரோட புள்ள நீங்களே திருப்பி வாங்கிடுங்க...பிரச்சனை ஓவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X