காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொலை பட்டியலில் 200 பேர்!

Updated : அக் 16, 2021 | Added : அக் 15, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி ; பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இதர பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து,காஷ்மீரில் 200 பேரை கொல்ல ரகசிய சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பா.ஜ., ஆதரவாளர்கள் மற்றும் அப்பாவி ஹிந்துக்களை, பயங்கரவாதிகள் குறி வைத்து கொலை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் ஒரு பள்ளியின் முதல்வர், ஆசிரியர், ஐந்து ராணுவ அதிகாரிகள்உள்ளிட்ட ஏழு
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கொலை பட்டியலில்...

புதுடில்லி ; பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இதர பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து,காஷ்மீரில் 200 பேரை கொல்ல ரகசிய சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் சமீப காலமாக பா.ஜ., ஆதரவாளர்கள் மற்றும் அப்பாவி ஹிந்துக்களை, பயங்கரவாதிகள் குறி வைத்து கொலை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஒரு பள்ளியின் முதல்வர், ஆசிரியர், ஐந்து ராணுவ அதிகாரிகள்உள்ளிட்ட ஏழு பேர்,பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின்படி, ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அதிரடிப் படைகளமிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாதிகளுடன் இணைந்து, காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.


ரகசிய சுற்றறிக்கைஇது குறித்து இந்திய உளவுப் பிரிவு, காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:செப்., 21ல், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முசாபராபாதில் ரகசிய கூட்டம் நடந்துஉள்ளது.இதில், பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., உயரதிகாரிகள்மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுஉள்ளது. இதற்காக பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள், ஹிந்து பண்டிட்டுகள், ஹிந்து பண்டிட்டுகளை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோர், மத்திய அரசை ஆதரிக்கும் பத்திரிகையாளர்கள், போலீஸ் உளவாளிகள் என, 200 பேர் அடங்கிய பட்டியலை அவர்கள் தயாரித்துள்ளனர்.


அவர்களை கொலை செய்ய, உரி மற்றும் தங்தர் எல்லை வழியே துப்பாக்கி, வெடிகுண்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கடத்தி வருவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் முழுக்க முழுக்க காஷ்மீரிகளால் நடத்தப்பட்டது போல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கைஇந்திய உளவுப் பிரிவின ரிடம் உள்ள பயங்கரவாத அமைப்பினர் பட்டியலில் இடம் பெறாத, பாக்., ஆதரவாளர்களை தாக்குதலில் ஈடுபடுத்துவது என முடிவாகியுள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க, புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஜம்மு - காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை சுலபமாக திசை திருப்பி, தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தலாம் என, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே காஷ்மீரில் பள்ளி முதல்வர், ஆசிரியர் ஆகியோரின் கொலைகளுக்கு, 'ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-அக்-202120:27:14 IST Report Abuse
Duruvesan we have elected a majority government and we have a PM, They will deal it. You just shut all urs
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
16-அக்-202120:21:35 IST Report Abuse
Fastrack இந்தியாவின் பல்வேறு மாநில இளைஞர்களுக்கு இலவசமா நிலமும் பயிரிட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு முன்னேறும் வரை கடனும் உதவிப்பணமும் வழங்கி குடியமர்த்தலாம்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-அக்-202119:38:00 IST Report Abuse
Duruvesan விடியலு ஆட்சியில் தமிழகம் நன்றாக உள்ளது, இதுக்கு தான் விடியலு கோயிலை தொறக்க வேணாம்னு சொன்னது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X