கீழ்ப்பாக்கம்-சாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களிடம், கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.சென்னையில், சாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களிடம், இருசக்கரத்தில் வாகனத்தில் வரும் மர்ம நபர்கள், மொபைல் போனை பறித்து செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில், கீழ்ப்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட போலீசார், பல்வேறு வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று அதிகாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில், கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் ஒலிபெருக்கி வாயிலாக வழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நடைபயிற்சியின் போது, பாதுகாப்பாக இருக்கும் படியும், விலை உயர்ந்த மொபைல் போன்கள் எடுத்து வருவதையும், நகைகள் அணிவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.சந்தேகப்படும் படி எவரேனும் சுற்றித் திரிந்தால், அது குறித்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE