பூங்காக்கள் பராமரிப்பில் தொடர் அலட்சியம் | Dinamalar

பூங்காக்கள் பராமரிப்பில் தொடர் அலட்சியம்

Added : அக் 15, 2021 | |
குரோம்பேட்டை,-பல்லாவரம் நகராட்சியில், 47 பூங்காக்களை முறையாக பராமரிக்காததால், ஒப்பந்த நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால், சில இடங்களில் பொதுமக்களே பூங்காவை திறந்து, மூடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகளில், 47 பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள், அம்ருத், பொது மற்றும் சி.எம்.டி.ஏ., நிதிகள் வாயிலாக

குரோம்பேட்டை,-பல்லாவரம் நகராட்சியில், 47 பூங்காக்களை முறையாக பராமரிக்காததால், ஒப்பந்த நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால், சில இடங்களில் பொதுமக்களே பூங்காவை திறந்து, மூடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகளில், 47 பூங்காக்கள் உள்ளன. இப்பூங்காக்கள், அம்ருத், பொது மற்றும் சி.எம்.டி.ஏ., நிதிகள் வாயிலாக சீரமைக்கப்பட்டன. சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த இப்பூங்காக்களை, அனைத்து வார்டு மக்களும், காலை மற்றும் மாலையில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒரு ஆண்டாக, பூங்கா பராமரிப்பில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. மாதந்தோறும், பல லட்சம் ரூபாயை 'அபேஸ்' செய்து வந்தனர். அதனால், முறையாக பராமரிக்க பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், 47 பூங்காக்களையும், முறையாக பராமரிக்காத ஒப்பந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பூங்காக்களுக்கு பூட்டு போட்டு மூடிவிட்டனர்.சில நாட்களாக, நகராட்சி ஊழியர்கள் மூலம், காலை மற்றும் மாலையில் பூங்காக்கள் திறந்து விடப்படுகின்றன. சில இடங்களில், பொதுமக்களே திறந்து, மூடுகின்றனர்.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:பூங்காக்களை பராமரிக்கும் நிறுவனம் முறையாக பராமரிக்கவில்லை என்று, தொடர்ந்து புகார் வந்தது. அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, ஊழியர்கள் வாயிலாக பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. நிறுவனம், முறையாக பதில் அளிக்காத பட்சத்தில், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, உபகரணங்களை சீரமைத்து, மற்றொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X