பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

Added : அக் 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், தினமும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகரின் மையமாக அரண்மனை பகுதி உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் செயல்படுகின்றன. சரக்குவாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து போக்குவரத்து மிகுந்த நேரங்களில் ரோட்டில் சரக்குகளை இறக்கியும், ஏற்றவும்
 ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், தினமும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

ராமநாதபுரம் நகரின் மையமாக அரண்மனை பகுதி உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் செயல்படுகின்றன. சரக்குவாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து போக்குவரத்து மிகுந்த நேரங்களில் ரோட்டில் சரக்குகளை இறக்கியும், ஏற்றவும் செய்கின்றனர்.ரோட்டோரத்தில் இரண்டு,நான்கு சக்கரவாகனங்களை சிலர் நிறுத்துகின்றனர்.

இதனால் அரண்மனைப்பகுதியில்போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக பவுண்ட் கடைத்தெருவில் மொத்தவியாபாரம் அதிகளவில் நடைபெறுகிறது.

இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வியாபாரிகள், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும்,போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம்,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X