பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள் 

Added : அக் 15, 2021
Share
Advertisement
பாட்டியை தாக்கிய பேரன் மீது புகார் சென்னை: சென்னை, மந்தைவெளி, ராபர்ட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தா தேவி,82. தன் இரண்டு மகன்களுடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். ஒரு அறையை, வாடகைக்கு விட திட்டமிட்டு, அதை பூட்டினார். மூத்த மகன் வழி பேரன் இலக்கியன், அந்த அறையை தனக்கு ஒதுக்கும்படி சண்டை போட்டு, மூதாட்டியை சுத்தியால் தாக்கினார். இலக்கியனின் தாயும் சேர்ந்து தன்னை

பாட்டியை தாக்கிய பேரன் மீது புகார் சென்னை: சென்னை, மந்தைவெளி, ராபர்ட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் முகுந்தா தேவி,82. தன் இரண்டு மகன்களுடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். ஒரு அறையை, வாடகைக்கு விட திட்டமிட்டு, அதை பூட்டினார். மூத்த மகன் வழி பேரன் இலக்கியன், அந்த அறையை தனக்கு ஒதுக்கும்படி சண்டை போட்டு, மூதாட்டியை சுத்தியால் தாக்கினார். இலக்கியனின் தாயும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முகுந்தா தேவி நேற்று புகார் அளித்தார். மின்சாரம் பாய்ந்து பட்டதாரி பலிஅடையாறு: சென்னை சோழிங்கநல்லுார், அன்னை இந்திரா தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 24; பாரிமுனை இந்தியன் வங்கி தலைமையகத்தில் பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, சக ஊழியரான சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருடன், இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். அடையாறு, சர்தார் படேல் சாலையில் சதீஷ் ஓட்டிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் சதீஷ், அருகிலிருந்த மின் மாற்றி மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து இறந்தார். அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.இடி தாக்கி இருவர் காயம்தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்க்க, அம்பத்துார் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ௧௫ பேர், நேற்று மதியம் வந்துள்ளனர். மதியம் 3:00 மணியளவில், எதிர்பாராத விதமாக அவர்களில் இருவர் மீது இடி தாக்கியது. இதில் காயமடைந்த அவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தை உறுதி செய்த பூங்காவின் துணை இயக்குனர் காஞ்சனா, பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விபரங்கள் தெரியவில்லை எனக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X