சென்னை-காவலர் நினைவு நாள் அனுசரிப்பு ஒத்திகை காரணமாக, இன்றும், 18, 19 மற்றும் 21 ஆகிய நான்கு நாட்களுக்கும் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, சென்னை கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காவலர் நினைவு நாள், வரும் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஒத்திகை இன்றும், 18, 19 மற்றும் 21ம் தேதிகளிலும் நடக்கிறது.இதனால், நான்கு நாட்களுக்கு காலை 8:00 - 10:00 மணி வரை, காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், காரணீஸ்வரர் கோவில் தெரு சிக்னல் இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சிக்னல் வழியாக ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலைக்கு செல்லலாம்.சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து, காந்தி சிலை நோக்கி செல்லும் பஸ்கள், சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி, கச்சேரி சாலை, லஸ் சிக்னல், ராயப்பேட்டை பிரதான சாலை இடது புறம் திரும்பி, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம்.கண்ணகி சிலையில் இருந்து, காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள், காமராஜர் லாயிட்ஸ் சாலை சிக்னல் இடதுபுறம் திரும்பி, கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோவில் சிக்னல் வழியாக செல்ல வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, எம்.ஆர்.டி.எஸ்., அருகே இடது புறம் திரும்பி, லாயிட்ஸ் அணுகு சாலை வழியாக காமராஜர் சாலைக்கும், கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE