சென்னை 'சிங்கங்கள்' அசத்தல்: நான்காவது முறையாக சாம்பியன்

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
துபாய்-ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது.ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மார்கன் பவுலிங் தேர்வு செய்தார்.ருதுராஜ் நம்பிக்கைசென்னை அணிக்கு

துபாய்-ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது.



latest tamil news



ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மார்கன் பவுலிங் தேர்வு செய்தார்.


ருதுராஜ் நம்பிக்கை

சென்னை அணிக்கு ருதுராஜ், டுபிளசி ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. 'பவர் பிளே' ஓவர் (6) விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்தது. பின் திடீரென ரன் வேகம் குறைந்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்சர் அடிக்க முயன்ற ருதுராஜ் (32), சுனில் நரைன் பந்தில் ஷிவம் மாவியிடம் 'கேட்ச்' கொடுத்தார். டுபிளசி 35 வது பந்தில் அரைசதம் கடக்க, சென்னை அணி 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது. உத்தப்பா 15 பந்தில் 31 ரன் எடுத்தார். கடைசி பந்தில் டுபிளசி (86) அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. மொயீன் அலி (37) அவுட்டாகாமல் இருந்தார்.


latest tamil news





வெங்கடேஷ் அரைசதம்

கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஜோடி 10 ஓவரில் 88/0 ரன் எடுத்தது. 11வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், அரைசதம் அடித்த வெங்கடேஷ் (50), ராணாவை (0) அவுட்டாக்கினார். சுனில் நரைன் (2) விரைவில் வெளியேறினார். சுப்மனும் (51) அவுட்டாக சென்னை பக்கம்


latest tamil news



வெற்றி திரும்பியது.

தினேஷ் கார்த்திக் (9), சாகிப் (0), திரிபாதி (2), மார்கன் (4) என வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ஷிவம் மாவி (20) ஆறுதல் தந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது. பெர்குசன் (18) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Salem,இந்தியா
16-அக்-202111:45:21 IST Report Abuse
Mohan தமிழன் ஒருவர் கூட CSKடீமில் இல்லை என புலம்புபவர்களே, மற்ற டீமில் தற்சமயம் தமிழர்கள் இருக்கிறார்கள். பாலாஜி, பத்ரிநாத், விஜய் போன்றவர்கள் டீமில் இருந்துள்ளனர். ரிசர்வாக ஜெகதீசன் போன்றோர் உள்ளனர். ஐ.பி.எல். வியாபார நோக்கம் கொண்டது. டீம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது முக்கியம். இந்த மாதிரி விளையாட்டுகளில் தயவு கூர்ந்து சின்னப்பிள்ளைத் தனமான எண்ணங்களை நுழைக்க வேண்டாம் ப்ளீஸ்
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
16-அக்-202115:14:39 IST Report Abuse
கௌடில்யன்சென்னை மும்பைனு எதுக்கு பெயர் வைக்கிறது ..கொக்கு டீம் காடை டீம் கவுதாரி டீம்னு பெயர் வெச்சா இந்த கேள்வி எழாது .....
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
16-அக்-202109:20:23 IST Report Abuse
Suri மைதானத்தில் பரபரப்பான கட்டத்தில் ஒத்த வோட்டு பீ ஜெ பி என்ற பதாகையை ஒரு ரசிகர் காட்டியபோது அரங்கமே அதிர்ந்ததாம்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
16-அக்-202106:44:42 IST Report Abuse
 Muruga Vel எத்தனை தமிழர்கள் இந்த சென்னை சிங்கங்களில் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X