பொது செய்தி

தமிழ்நாடு

செங்கைக்கு 15 அரசு வழக்கறிஞர்கள்

Added : அக் 16, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 15 அரசு வழக்கறிஞர்கள், நியமனம் செய்து, அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள் அமையும்போது, அரசு வழக்கறிஞர்களை நியமித்து வருவது வழக்கம். இந்நிலையில், தி.மு.க., அரசு ஆட்சி அமைத்தவுடன், தமிழகம் முழுதும் அரசு வழக்கறிஞர்கள் நியமித்து, அரசு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட

செங்கல்பட்டு--செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 15 அரசு வழக்கறிஞர்கள், நியமனம் செய்து, அரசு உத்தரவிட்டது.தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள் அமையும்போது, அரசு வழக்கறிஞர்களை நியமித்து வருவது வழக்கம். இந்நிலையில், தி.மு.க., அரசு ஆட்சி அமைத்தவுடன், தமிழகம் முழுதும் அரசு வழக்கறிஞர்கள் நியமித்து, அரசு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர். திருமுகன், அரசு வழக்கறிஞர் எம். மகேஷ்குமார், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர் கே. வையாபுரி.மகளிர் நீதிமன்றத்திற்கு சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். சசிரேகா, சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர்.பாலாஜி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் கே. ஜாசீர் உசேன்.மதுராந்தகம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் வி.ரங்கநாதன், தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.கே.நெப்போலியன், தாம்பரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் ஆர்.குமரேசன்.தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.கேசவன், ஆலந்துார் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் எஸ்.பி.சம்பத்குமார்.திருக்கழுக்குன்றம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர் என். சதீஷ்பாபு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் இரண்டு, கூடுதல் அரசு வழக்கறிஞர் சி.தம்பிரான்.செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு, சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.ஆர். ராஜராஜன் ஆகியோரை நியமனம் செய்து, தமிழக அரசு, கடந்த 13ம் தேதி, உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X