பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர் விழிப்புணர்வு பயணம்

Added : அக் 16, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--செங்கல்பட்டில், உலகளாவிய இலக்குகளை அடைய, பள்ளி மாணவர் விழிப்புணர்வு பயணத்திற்கு, கலெக்டர், எஸ்.பி., வரவேற்றனர்.சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த விசு மகன் சர்வேஷ், 9, இவர், தாம்பரம் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், கடந்த ஆண்டு, காஷ்மீர் முதல், கன்னியாகுமரிவரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரை, முகநுாலில் வரும்

செங்கல்பட்டு--செங்கல்பட்டில், உலகளாவிய இலக்குகளை அடைய, பள்ளி மாணவர் விழிப்புணர்வு பயணத்திற்கு, கலெக்டர், எஸ்.பி., வரவேற்றனர்.சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த விசு மகன் சர்வேஷ், 9, இவர், தாம்பரம் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், கடந்த ஆண்டு, காஷ்மீர் முதல், கன்னியாகுமரிவரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரை, முகநுாலில் வரும் வீடியோக்களை பார்த்தார்.இதேபோல், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோரிடம் கூறினான். அதன்பின், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசி, பட்டியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி நிலையா-ன வளர்ச்சி உள்ளிட்ட 17 வகையான உலகளாவிய இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடர் விழிப்புணர்வு, ஓட்டத்தை ஓட சிறுவன் முடிவு செய்தார்.அதைத் தொடர்ந்து, கடந்த அக்., 2ம் தேதி, காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, மாணவர் சர்வேஷ், கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலையிலிருந்து, சென்னை வள்ளுவர் கோட்டம் வரை, 700 கி.மீ., பயணத்தை துவக்கினார்.தினமும், நாளொன்றுக்கு, 60 - 70 கி.மீ., வரை, தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர், நேற்று முன்தினம், செங்கல்பட்டு வந்தார். அப்போது, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராகுல்நாத், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர், பள்ளி மாணவர் சர்வேஷக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X