பொது செய்தி

இந்தியா

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஜபல்பூர்-மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் கால்நடைகளுக்கான பிரத்யேக சாக்லேட்டை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துஉள்ளனர்.மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நாநாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இதன் முடிவில் பால் உற்பத்தியை

ஜபல்பூர்-மத்திய பிரதேசத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் கால்நடைகளுக்கான பிரத்யேக சாக்லேட்டை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துஉள்ளனர்.



latest tamil news


மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நாநாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மாதங்களாக ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இதன் முடிவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கான சாக்லேட்டை தயாரித்துள்ளனர்.இதுகுறித்து பல்கலையின் துணை வேந்தர் திவாரி கூறியதாவது:'மல்டி வைட்டமின்' புரதச் சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த சாக்லேட்டை தீவனம் இல்லாத நேரங்களில் கால்நடைகளுக்கு வழங்கலாம் அல்லது இதர தீவனங்களுடன் சேர்த்தும் கூட இதை வழங்கலாம்.

இந்த சாக்லேட்டுகளை உண்ணும் கால்நடைகள் அதிக பால் சுரக்கும்; இது, இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் கருத்தரித்தல் விகிதத்தையும் அதிகரிக்கச் செய்யும்.மாநில கால்நடை பராமரிப்பு துறைக்கு உதவி வரும் எங்கள் பல்கலைக்கழகம் விரைவில் மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த சாக்லேட்டு களை வினியோகிக்கும் பணிகளை துவங்கும். 500 கிராம் எடையிலான ஒரு சாக்லேட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது


latest tamil news


.இந்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய, மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் அது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
16-அக்-202114:24:30 IST Report Abuse
Sivagiri அய்யய்யோ - அப்புறம் மாட்டுக்கு சுகர் வந்திடுச்சுன்னா ? . . . டெய்லி இன்சுலின் போடணுமா ? இன்சுலின் போட்டுக்கிட்டே சாக்லேட்டும் தின்னுமா ? . . அப்ப - அந்த பாலை குடிக்கிறவங்க இன்சுலின் போட வேண்டியதில்லையா ? மண்ட காயுதப்பா எப்போய் . . .
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
16-அக்-202110:52:17 IST Report Abuse
Yezdi K Damo இரண்டே மாசத்து ஆராய்ச்சியில் சாகோலேட் செஞ்சி விக்கற அளவுக்கு வந்துட்டாங்க . இதநால என்ன பக்கஜா விளைவுகள் வந்தால் என்ன பண்ணுவாங்க .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
16-அக்-202110:17:55 IST Report Abuse
duruvasar போங்கப்பா நீங்களும் உங்க ஆராய்ச்சியும். தண்ணீர் பற்றாகுறை மாநிலமான எங்க ஊரில் மாடு தண்ணி குடிக்காமலேயே தண்ணியா கறக்குது நாங்களெல்லாம் தண்ணிக்கு பதிலாக ஆவின் பாலைத் தான் குடிக்கிறோம். இப்போ மே 7க்கு அப்பறம் வீட்டுகுழாயிலையே பாலை புடிச்சிகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X