பயங்கரவாதிகளுடன் சண்டை: இரு வீரர்கள் வீர மரணம்

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜம்மு-ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பிய நிலையில், ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிய பலரும் திரும்பி வருகின்றனர். இது பல்வேறு பகுதிகளிலும் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளுக்கு ஆத்திரத்தை

ஜம்மு-ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.



latest tamil news


ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பிய நிலையில், ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிய பலரும் திரும்பி வருகின்றனர். இது பல்வேறு பகுதிகளிலும் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் சமீபத்தில் பொதுமக்கள் சிலரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, பயங்கர வாதிகளை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:பூஞ்ச் மாவட்ட வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.இதில் ஒரு அதிகாரி உட்பட இரு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.


latest tamil news


அவர்களில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது; மற்றொரு வர் உடலை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே சமீபத்தில் ஸ்ரீநகரில் பொதுமக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் சிலர் புல்வாமா மாவட்டத்தின் வாஹிபுக் பகுதியில் பதுங்கி இருந்தனர்.இதையறிந்த பாதுகாப்பு படையினர் நேற்று அவர்களை சுற்றிவளைத்தனர். இதில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-அக்-202112:10:12 IST Report Abuse
Rasheel அவனுக 1500 வருட முன்னால் உள்ள கற்காலத்தில் வாழ்கிறான். அவனிடம் போய் நீ படி நல்ல வேலைக்கு போ, பெண்களை மரியாதையாக நடந்து, குடும்பத்தை படிக்க வை என்று சொன்னால், அவன், குண்டு வைக்க, போதை பொருள் விற்க படிப்பு எதற்கு என்று அவனுடைய அகராதி படி நியாயமாக கேட்கிறான் போல? சரி பெண்களை படிக்க வைத்து வேலை செல்ல வை என்று சொன்னால் எல்லா பள்ளி கூட்டத்தையும் இடிப்பேன் என்கிறான். பெண்கள் பிள்ளை மட்டுமே பெற பிறந்தவர்கள். அவர்கள் படித்தால் என்ன லாபம் என்றும் கேட்கிறான். இது எப்படி இருக்கு??
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
16-அக்-202110:25:24 IST Report Abuse
JeevaKiran நம் வீரர்களின் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. தொழில் நுட்பத்தில் உடனடி முன்னேற்றம் தேவை.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
16-அக்-202110:12:17 IST Report Abuse
SENTHIL NATHAN இந்த புல்லட் ப்ரூப் கவசம் உபயோகித்தால் இந்த மாதிரி உயிர் இழப்புகளை தவிர்க்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X