கொடைக்கானல் : கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியின் இருபுறங்களிலும் வாகனங்களை அனுமதிப்பது, கலையரங்கம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றுதல், ஏரிச்சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றுவது,பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து பணிமனையில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், போக்குவரத்து மேலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்துத்துறை அலுவலர்கள், வணிகர்கள் பங்கேற்றனர்.