டூவீலர் மோதி தொழிலாளி பலி
சிவகாசி: ஆலமரத்துப்பட்டி பராசக்தி காலனியை சேர்ந்தவர் புக் பைன்டிங் தொழிலாளி பாண்டியன் 52. டூவீலரில் ஊருக்கு செல்லும்போது டூ வீலரை செங்கமலப்பட்டி ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார் .
அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் பாண்டியன் இறந்தார். சிறுவன் டூவீலரில் வந்த மற்றொரு 16 வயது சிறுவன் காயம் அடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனத்தில் இருந்த பணம் மாயம்
சிவகாசி: சாட்சியாபுரம் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் பால் ஏஜென்சி தொழில் நடத்தி வரும் சுதாகர் 45. லோடு வாகனத்தில் ரூ. 35 ஆயிரம் வைத்திருந்த நிலையில் அப்பகுதி பெட்ரோல் பல்க்கில் டீசல் போடுவதற்காக சென்றார். அப்போது உள்ளே இருந்த பணத்தை காணவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
சிவகாசி: புலிப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் குள்ளப்பன் 60. மதுவில் விஷம் கலந்து குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்ற ஐவர் கைது
சிவகாசி: விருதுநகர் பை பாஸ் ரோட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ரவிச்சந்திரன் 47, பாண்டியராஜன் 51, முருகன் 26, ஆகியோரை கிழக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிவகாசி காரனேசன் பஸ்ஸ்டாப் அருகே தடை லாட்டரி சீட்டுகளை விற்ற மணிகண்டன் 32, சங்கிலிகருப்பன் 28 , ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்தனர்.