திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். 'உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பிரதமர் மோடி, அமித்ஷா படங்களை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement