உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
:
க.அருண், முக்கூடல், நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஏர் இந்தியா' நிறுவனம், 'டாடா இந்தியா' நிறுவனமாகி விட்டது.
'பொதுத்துறைகளை, பெருமுதலாளிகளுக்கு தாரை வார்க்கவே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கிறார், பிரதமர் மோடி. நஷ்டத்தில் இயங்குவதை, டாடா வாங்குவது ஏன்; அவரால் லாபம் பெற முடியும் என்றால் அரசால் முடியாதா?' என அங்கலாய்த்து இருக்கிறார், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்.நம் நாட்டில் நல்ல நிலையில் இயங்கிய தொழிற்சாலைக்குள், கம்யூ., நுழைந்து, தொழிற்சங்கம் அமைத்து, பிரச்னைகளை உருவாக்கும். விரைவில், அந்தநிறுவனத்தை 'ஊத்தி மூட' வைத்து, தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி, கம்யூ., புளகாங்கிதம் அடையும்.
கம்யூ., புகுந்த எந்த இடமாவது உருப்பட்டு இருக்கிறதா?இதுவரை ஏதாவது ஒரு தொழிற்சாலையை, கம்யூனிஸ்ட்கள் தங்கள் முயற்சியால் உருவாக்கியதாக சுட்டிக் காட்ட முடியுமா அருணன்? கம்யூனிஸ்ட்கள் உருவாக்கிய தொழிற்சாலைகளின் பட்டியல் தாருங்கள் பார்க்கலாம்... அரசாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும், எந்த நிறுவனத்தையும் லாபம் வரவில்லை என்றாலும், நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் தான் தொடர்ந்து நடத்த முடியும்.பல்வேறு முயற்சிகளுக்கு பின்னும், தொடர்ந்து நஷ்டமே வந்து கொண்டிருந்தால், அந்த நிறுவனத்தை மூடுவரே தவிர, மேலும் நஷ்டத்தை அனுபவிக்க துணிய மாட்டார்கள்
.'தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்குவதே இந்த அரசின் கொள்கை. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த, 'ஏர் இந்தியா' நிறுவனத்தை, வெற்றிகரமாக தனியார் மயமாக்கி உள்ளோம். இது போல தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்' என தெளிவாக எடுத்துக் கூறி இருக்கிறார் நம் பிரதமர் மோடி.

கம்யூனிஸ்ட்களின் தொழிற்சங்க கொள்கை என்ன தெரியுமா?நுாறு நபர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில், 200 பேரை பணியமர்த்த வைத்து, அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து, அந்த தொழிற்சாலைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி மூடச் செய்வது தான், கம்யூ., கொள்கை!குரங்கிற்கு கூடு கட்டத் தெரியாது; ஆனால், துாக்கணாங்குருவி கூட்டை பிய்த்து எறியும். அது போல, கம்யூனிஸ்ட்களுக்கு எந்த தொழிற்சாலையையும் உருவாக்கவோ, நிர்வகிக்கவோ தெரியாது... ஆனால், நல்ல முறையில் இயங்கும் நிறுவனத்தை இழுத்து மூட வைக்க மட்டும் நன்றாக தெரியும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE