விருதுநகர் : முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக விருதுநகரில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து உறுதிமொழி எடுத்தனர். விருதுநகரில் 15 இடங்களில் மரக்கன்றுகள் நட்டனர். நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பிச்சை மணி, நெல்சன்தாஸ், கவி அரசு, நகர நிர்வாகிகள் மைக்கேல் ராஜ், ராஜலெட்சுமி, பன்னீர், முத்து கமல், பொன்ராஜ், ராஜ்கமல், பாலமுருகன், மாரியப்பன், சரவணன் பங்கேற்றனர்.காரியாபட்டி: பிசிண்டியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் உமைஈஸ்வரி, துணைத்தலைவர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மனோகரன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் மூக்கன், எஸ்.ஐ., அசோக்குமார், அப்துல்கலாம் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், மாவட்டத்தலைவர் வாலகுரு, பொருளாளர் ராமர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயபாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE