சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் மத்திய அமைச்சர் அமித் ஷா| Dinamalar

சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறையில் மத்திய அமைச்சர் அமித் ஷா

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (28)
Share
போர்ட் பிளேர்-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமாவன அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேற்று மாலை

போர்ட் பிளேர்-அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரரான சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்குச் சென்று பார்வையிட்டு, அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.



latest tamil news


மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமாவன அமித் ஷா மூன்று நாள் பயணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நேற்று மாலை வந்தடைந்தார்.போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அமித் ஷாவை, துணை நிலை கவர்னர் ஜோஷி வரவேற்றார்.


latest tamil news


இதையடுத்து தேசிய நினைவு சிறைச் சாலைக்கு சென்ற அமித் ஷா, அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின், அங்கு சுதந்திர போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்ட அமித் ஷா, அங்கிருந்த சாவர்க்கர் படத்திற்கும் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X