நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் தமிழகத்தில் அமைக்கப்படும்; விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் தமிழகத்தில் அமைக்கப்படும்'; விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (19)
Share
சென்னை : ''தமிழகத்தில், நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும்,'' என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். தமிழக தடகள சங்கத்தின் சார்பில், 93வது மாநில அளவிலான தடகள போட்டிகளின் துவக்க விழா, சென்னை, நேரு விளையாட்டரங்கில், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழர்கள் உடல்


சென்னை : ''தமிழகத்தில், நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும்,'' என, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.



latest tamil news



தமிழக தடகள சங்கத்தின் சார்பில், 93வது மாநில அளவிலான தடகள போட்டிகளின் துவக்க விழா, சென்னை, நேரு விளையாட்டரங்கில், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழர்கள் உடல் நலத்தை பேண வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


latest tamil news



தேசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கான செலவை, தமிழக அரசே ஏற்கும்.அந்த வகையில், பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு, 2 கோடி ரூபாய் அளித்து, முதல்வர் உற்சாகப்படுத்தி உள்ளார். வாள் வீச்சு வீராங்கணை பவானிதேவி, பிரான்சில் பயிற்சி பெற உதவி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வீரர், வீராங்கனைகளை ஒலிம்பிக் விளையாட்டுக்கு தயார்படுத்தும் வகையில், ஒலிம்பிக் அகாடமிகள் துவங்கப்படும். வீரர், வீராங்கணைகள் தங்கி பயிற்சி பெறும் வகையில், ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன், தமிழக தடகள சங்கத் தலைவர் தேவாரம், செயலர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X