மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்ப நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்கள், கணக்கில் காட்டாமல் 184 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான அஜித்

மும்பை : மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்கள், கணக்கில் காட்டாமல் 184 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.



latest tamil news



மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில், சமீபத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.


latest tamil news


அந்த இரண்டு குழுமங்களும் 184 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் வருமானம் ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், கணக்கில் காட்டப்படாத 2.13 கோடி ரூபாய் பணமும், 4.32 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202118:57:00 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் இப்படி மிரட்டி எவ்வளவு பேரை பணிய வைக்க முடியும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-அக்-202115:47:36 IST Report Abuse
sankaseshan தேச துரோக மதமாற்றம் செய்யும் கூட்டத்துக்கு துட்டு அடிக்க முடியவில்லை மோடிஅரசு ஆப்பு வைத்து விட்டது வெளிநாட்டு நன்கொடை முடக்க பட்டு விட்டது அதுதான் கதறல்
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
16-அக்-202113:37:18 IST Report Abuse
GANESUN புதுசு புதுசா கூலிபான்கள் வந்து சம்பந்தமில்லாத எவ்வளவு கூவினாலும் (7 1/2 வருஷமா கூவறதுதான்) ஒரு ,.... முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X