திருவள்ளூரை அடுத்த திருவூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: முதல்வர் கடிதத்திற்கு முரணாக மந்திரி பேச்சுதிருவள்ளூரை அடுத்த திருவூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:தமிழகத்தில், 1,076 கி.மீ., நீளம் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில், சதுப்பு நிலம் பாதுகாப்பு இயக்கம் துவக்கப்படும். வரும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு வெடிப்பதில் இருந்து மக்கள் மனம் திரும்ப வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.தற்போது, எந்தெந்த தொழிற்சாலைகளில், அபாயகரமான ரசாயன கலவை வெளி வருகிறது என்பதை கண்டறிந்து, அவற்றை சுத்திகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு சுத்திகரிப்பை மேற்கொள்ளாத தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE