அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது'

Added : அக் 16, 2021
Share
Advertisement
சென்னை:'இலங்கையுடன் உள்ள ராணுவ ஒத்துழைப்பை இந்தியா கைவிட வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, ராணுவ தளபதி ஷிவேந்திர சில்வா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசி உள்ளார்.இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் ஆண்டுக்கு

சென்னை:'இலங்கையுடன் உள்ள ராணுவ ஒத்துழைப்பை இந்தியா கைவிட வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, ராணுவ தளபதி ஷிவேந்திர சில்வா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசி உள்ளார்.இந்த சந்திப்பின் போது, இந்தியாவில் ஆண்டுக்கு ஆயிரம் சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூடுதலாக, 50 ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.இது, இலங்கை தமிழர் நலன்களுக்கு எதிரானதாகவே அமையும். இந்தியா வழங்கும் ராணுவ உதவிகள், இலங்கை தமிழர்களுக்கு எதிராகத் தான் பயன்படுத்தப்படும். இந்த அச்சம், உலகம் முழுதும் வாழும் தமிழர்களிடம் நிலவுகிறது என்பதை, மத்திய அரசு உணர வேண்டும்.எனவே, சிங்கள படையினருடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், அந்நாட்டு படையினருக்கு பயிற்சி அளிப்பதையும், இந்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X