சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவிநாசி அருகே விபத்து மருத்துவ மாணவர் பலி

Added : அக் 16, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அருகே நடந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர் பலியானார்.கேரள மாநிலம், பாலக்காடு, கடம்பழிபுரத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், 63. இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் இர்ஷத் அகமது 25. மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவர்.நேற்று கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காட்டுக்கு, டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அவிநாசி:அவிநாசி அருகே நடந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர் பலியானார்.கேரள மாநிலம், பாலக்காடு, கடம்பழிபுரத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், 63. இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன் இர்ஷத் அகமது 25. மருத்துவ படிப்பு இறுதியாண்டு மாணவர்.நேற்று கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காட்டுக்கு, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலுாரில் ஆறு வழி சாலையில் இர்ஷத் அகமது ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இழுத்து சென்று தடுப்பில் மோதியது. அதில், இரும்பு கம்பி தலை மோதி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவிநாசி போலீசார் கூறுகையில், 'இர்ஷத் அகமத், அதிக வேகத்தில் பைக்கில் சென்றதால், விபத்து ஏற்பட்டது. ஹெல்மெட் அணியவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X