செஞ்சி;சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் செஞ்சி கோட்டையில் ஜெபம் செய்ததற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தனர்.சென்னை, நல்லுார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாத்ரக், 48; எலிசா, 52; கிறிஸ்தவ மத போதகர்கள். இவர்கள் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டைக்கு வந்தனர்.அங்கு ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள செட்டிக்குளம் மேல் உள்ள கல் மண்டபத்தில் கிறிஸ்தவ பாடல்களைப்பாடி பிரார்த்தனை செய்தனர்.தகவலறிந்து வந்த இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேலும், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.செஞ்சி போலீசார், சென்னை குழுவினரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், நகர தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் செஞ்சி போலீஸ் நிலையம் முன் கூடி டி.எஸ்.பி., இளங்கோவனிடம் புகார் மனு அளித்தனர். அதில், பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்கள் பகுதியில் மத பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.டி.எஸ்.பி., விசாரணை நடத்தி சென்னை குழுவினரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE