கொரோனாவில் இறந்த தந்தை: இடைத்தேர்தலில் மகன் வெற்றி

Added : அக் 16, 2021
Advertisement
திருப்பூர்:கொரோனாவில் பலியான தனது தந்தையின் சேவையை தொடரவே, வார்டு உறுப்பினராகியுள்ளதாக, தேனீஸ்வரன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சி, தேனீஸ்வரன்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 66. இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில், 4வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோனா தொற்றால், மே 24ல்

திருப்பூர்:கொரோனாவில் பலியான தனது தந்தையின் சேவையை தொடரவே, வார்டு உறுப்பினராகியுள்ளதாக, தேனீஸ்வரன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சி, தேனீஸ்வரன்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 66. இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலில், 4வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொரோனா தொற்றால், மே 24ல் உயிரிழந்தார். கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகன் கோகுல்ராஜ், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.கோகுல்ராஜ் கூறுகையில்,'' எனது அப்பா செய்து கொண்டிருந்த சேவையை, நான் தொடர வேண்டுமென மக்கள் விரும்பினர். அதற்காகவே, தேர்தலில் போட்டியிட்டேன். வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X