கள்ளக்குறிச்சி, : அனுமதியின்றி விடுப்பு எடுத்த பெண் காவலர், விசாரணைக்கு பயந்து அதிகளவில் இருமல் (சிரப்) மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் தீபா, 38; இவர், சில மாதங்களுக்கு முன் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு அயல் பணியாக சென்றார். கடந்த 11ம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தேர்தல் பணியில் தீபா ஈடுபட்டிருந்தார்.நேற்று காலை வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தீபா பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தேர்தல் பணிக்கு பின் அனுமதியின்றி விடுமுறை எடுத்ததால், விசாரிக்க தீபாவை மைக்கில் அழைத்துள்ளார்.
விசாரணைக்கு பயந்த தீபா, அதிக மாத்திரைகளை பொடியாக்கி, இருமல் மருந்துடன் (சிரப்) கலந்து குடித்துள்ளார். இதில் மயக்கத்தில் இருந்த தீபா, தானாகவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராஜலட்சுமி, மருத்துவமனைக்குச் சென்று தீபாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கடந்த 11ம் தேதி தேர்தல் பணியில் தீபா ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பணிமுடிந்து சென்ற தீபா, எவ்வித அனுமதியின்றி ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். இதற்கான காரணத்தைக் கேட்க போலீஸ் நிலையம் வரும்படி தெரிவித்ததால் இருமல் மருந்தை (சிரப்) அதிகளவில் குடித்துள்ளார்' என்றார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement