காலிபிளவர் பக்கோடாவில் பேன்டேஜ் சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்

Added : அக் 16, 2021 | கருத்துகள் (18)
Share
திருநின்றவூர்; திருநின்றவூரில், பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில், சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று

திருநின்றவூர்; திருநின்றவூரில், பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வாங்கப்பட்ட காலிபிளவர் பக்கோடாவில் 'பேன்டேஜ்' இருந்த விவகாரம் தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில், சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.



latest tamil news



இந்த சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு, காலிபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.அதை வீட்டில் வைத்து அவர் சாப்பிட முயன்ற போது, அதில் 'பேன்டேஜ்' இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர், சூப்பர் மார்க்கெட்டில் கேட்ட போது, முறையான பதில் கிடைக்கவில்லை.


latest tamil news



இது குறித்து அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு நடத்தி, 5,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X