பொது செய்தி

தமிழ்நாடு

ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறை தீவிர கண்காணிப்பு

Added : அக் 16, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே, குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனப்பகுதி வழி செல்லும் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை, ஆசனூர் அருகே குடியிருப்பு

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே, குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனப்பகுதி வழி செல்லும் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுத்தை, ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குமிங்கும் நடமாடிய சிறுத்தை ஒரு கோழியை துரத்தியுள்ளது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை, ஒரு நாயை அடித்து இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில்தான் மீண்டும் வந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சிறுத்தை கால்தடம் மூலம், நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X