சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பள்ளி மாணவர் பலி; மோதிய வாகனம் சிக்கியது

Added : அக் 16, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: விபத்தில் உயிரிழந்த மாணவர் மீது மோதிய வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்து, அதை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, மஞ்சப்பாலியை சேர்ந்த மணி மகன் கந்தசாமி, 15. சாமகுட்டப்பட்டி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம், குரால்நத்தம் அருகே டி.வி.எஸ்., மொபட்டை ஓட்டிச்சென்றபோது, அடையாளம் தெரியாத

பனமரத்துப்பட்டி: விபத்தில் உயிரிழந்த மாணவர் மீது மோதிய வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்து, அதை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த, மஞ்சப்பாலியை சேர்ந்த மணி மகன் கந்தசாமி, 15. சாமகுட்டப்பட்டி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம், குரால்நத்தம் அருகே டி.வி.எஸ்., மொபட்டை ஓட்டிச்சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, தடம் எண்: 31 அரசு டவுன் பஸ்சை நிறுத்தி, டிரைவர், கண்டக்டரிடம், பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்தனர். நேற்று, தடய அறிவியல் போலீசார், மொபட் மீது பஸ் மோதிய தடயம் உள்ளதா என, சோதனை செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'கந்தசாமி பஸ்சை முந்த முயன்றபோது, எதிரே வந்த, மற்றொரு டி.வி.எஸ்., ஹெவி டூட்டி மொபட் மோதியது. அதில், கந்தசாமி, பஸ் மீது தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவர் மீது மோதிய மொபட்டை ஓட்டி வந்த குரால்நத்தத்தை சேர்ந்த, வெங்கடாசலம், 38, என்பவரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X