பொது செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்குகளை கண்டுபிடிக்க வெகுமதி: மத்திய மண்டல ஐ.ஜி., அறிவிப்பு

Added : அக் 16, 2021
Share
Advertisement
திருச்சி: ''மத்திய மண்டலத்தில் கொலை வழக்குகளை துப்புத் துலக்க உதவுபவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும்,'' என, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், நான்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, அரியலூர் மாவட்டத்தில் இரண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐந்து, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் தலா

திருச்சி: ''மத்திய மண்டலத்தில் கொலை வழக்குகளை துப்புத் துலக்க உதவுபவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும்,'' என, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில், நான்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, அரியலூர் மாவட்டத்தில் இரண்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐந்து, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒன்று என 16 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு, மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வழக்குகளை கண்டுபிடித்து தந்தாலோ, வழக்குகளை கண்டுப்பிடிக்க பயனுள்ள தகவல்களை கொடுத்தாலோ, ஒவ்வொரு வழக்கிற்கும், 10 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக அளிக்கப்படும். இவ்வழக்குகளில், போலீசாருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் பொதுமக்கள், திருச்சி, ஐ.ஜி., அலுவலகத்தை, 0431 2333866 என்ற போன் எண்ணிலும், டி.ஐ.ஜி., அலுவலகத்தை 0431 2333909 என்ற போன் எண்ணிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை 9498100645 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அதே போல், தஞ்சாவூரில் 0436 2277477, 9498100805, புதுக்கோட்டையில் 9498100730, பெரம்பலூரில் 9498100690, அரியலூரில் 9498100705, திருவாரூரில் 9498100905, மயிலாடுத்துறையில் 9442626792 என்ற போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்று ஐ.ஜி., அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X