பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., விவசாய சங்க போராட்ட குழு மோதலை தடுத்த கரூர் போலீசார்

Added : அக் 16, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்கச் சென்ற விவசாய சங்க போராட்ட குழுவினருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் ஏற்படவிருந்த மோதலை போலீசார் தடுத்தனர்.உத்தரபிரதேசத்தில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, நேற்று நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. கரூர் தபால்-தந்தி அலுவலகம் முன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை

கரூர்: கரூரில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்கச் சென்ற விவசாய சங்க போராட்ட குழுவினருக்கும், பா.ஜ., நிர்வாகிகளுக்கும் ஏற்படவிருந்த மோதலை போலீசார் தடுத்தனர்.


உத்தரபிரதேசத்தில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டு, நேற்று நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. கரூர் தபால்-தந்தி அலுவலகம் முன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிப்பதாக, விவசாய போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். இதையறிந்த, பா.ஜ., வினர் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் தபால்-தந்தி அலுவலகம் எதிரே குவிந்தனர். விவசாய சங்க போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில், பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க கொண்டு வந்தனர். அதை போலீசார் பறித்து சென்றனர். பிறகு, பா.ஜ.,வினரும், போராட்ட குழுவினரும் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். சுதாரித்து கொண்ட போலீசார், போராட்ட குழுவினர், 22 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பா.ஜ.,வினரையும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால், இருதரப்பினரிடையே ஏற்படவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போராட்ட குழுவினர், பா.ஜ., நிர்வாகிகளை கைது செய்யக்கோரி வேனிலேயே போராட்டம் நடத்தினர். டி.எஸ்.பி., தேவராஜ், மற்றும் போலீசார் ஆகியோர், 'பா.ஜ., நிர்வாகிகள் மீது கட்டாயம் வழக்குப்பதிவு செய்யப்படும்' என, தெரிவித்தனர். பிறகு, விவசாய சங்க போராட்ட குழுவினர் வேனிலிலிருந்து இறங்கி திருமண மண்டபத்துக்குள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X