ஆப்கன் குண்டுவெடிப்பு; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
காபூல்: ஆப்கனின் மசூதியில் நேற்று நடந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அதன் பின், ஆப்கனில் ஐ.எஸ்., அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அங்குள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த
Islamic State, IS, responsibility, Kandahar, mosque attack,  suicide bomber attack,  Shia mosque, taliban,  ஆப்கானிஸ்தான், தலிபான்கள், மசூதி, குண்டு வெடிப்பு, ஆப்கன், மசூதியில் குண்டுவெடிப்பு, ஐஎஸ் பயங்கரவாதிகள், பொறுப்பேற்பு,

காபூல்: ஆப்கனின் மசூதியில் நேற்று நடந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆக., 15ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அதன் பின், ஆப்கனில் ஐ.எஸ்., அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அங்குள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில நாட்களில் குறிப்பாக ஆக., 27ம் தேதி, காபூல் விமான நிலையம் அருகே இரு மனித வெடிகுண்டு தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடந்தது.


latest tamil news


இதில், அமெரிக்க ராணுவத்தினர் 18 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 143 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., கோராசன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

கடந்த 9ம் தேதி, ஆப்கனில் குண்டஸ் நகரில் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த தாக்குதலும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்தே நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று (அக்., 15) ஆப்கனின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


latest tamil news

ஐ.எஸ்., கோராசன் யார்?


பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய பயங்கரவாத அமைப்பு ஐ.எஸ்., -கோராசன். ஆப்கனின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ்., -கோராசன்கள் வளர்ந்தனர். இவர்கள் ஆப்கனின் சில மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அமெரிக்க படை மற்றும் தலிபான்களின் தாக்குதலால் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர். இவர்கள் தொடர்ந்து தலிபான்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
16-அக்-202122:11:31 IST Report Abuse
sankaseshan குண்டு வைக்கும் குண்டர்கள்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-அக்-202121:08:02 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து வெளியே வந்தால் மனம் திருந்தி எல்லாம் நல்வழியில் செல்லவே மாட்டார்கள்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-அக்-202118:44:14 IST Report Abuse
DVRR PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X