அ.தி.மு.க.,வை ஜெயலலிதா காப்பாற்றுவார்: சசிகலா பேட்டி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை ஜெயலலிதா காப்பாற்றுவார்: சசிகலா பேட்டி

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (61)
Share
சென்னை: ‛‛அ.தி.மு.க., தொண்டர்களை எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்'' என ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சசிகலா கூறினார்.சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், அமைதியாக
A.D.M.K,ADMK,Jayalalithaa,Sasikala,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,சசிகலா,ஜெயலலிதா

சென்னை: ‛‛அ.தி.மு.க., தொண்டர்களை எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்'' என ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சசிகலா கூறினார்.

சட்டசபை தேர்தலின் போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், பிரதான எதிர்க்கட்சியானது. அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின், அமைதியாக இருந்த சசிகலா, ஜூலை மாதத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் போனில் பேசி வந்தார்.
விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருடன் பேசியவர்கள் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். அதனால், சசிகலாவுடன் பேச பயந்தனர்.அடுத்த கட்டமாக அவர் பேசும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். கொரோனா குறைந்ததும், கட்சியினரை நேரில் சந்திக்க போவதாக தெரிவித்திருந்தார்.


latest tamil news



அதன்படி, இன்று(16ம் தேதி) சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


latest tamil news



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். 5 ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன் இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். இருவரும் அ.தி.மு.க.,வையும் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சசிகலா கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X