70 சதவீத இலக்கை அடைய 12 - 17 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: தென் ஆப்பிரிக்கா அறிவிப்பு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரிட்டோரியா: நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்க நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா, அடுத்த வாரம் முதல், 12 - 17 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என, அறிவித்து உள்ளது.உலகையே உலுக்கிய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டது. இதனால் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட்
Covid vaccine, South Africa, vaccinate, children, teenagers,  one dose, கோவிட், பெருந்தொற்று, கோவிட் தடுப்பூசி, சிறுவர்களுக்கு தடுப்பூசி, தடுப்பூசி, தென் ஆப்பிரிக்கா, அறிவிப்பு,

பிரிட்டோரியா: நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்க நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா, அடுத்த வாரம் முதல், 12 - 17 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என, அறிவித்து உள்ளது.

உலகையே உலுக்கிய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டது. இதனால் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும் கோவிட் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் தடுப்பூசி கிடைக்காத பல ஏழை நாடுகள் புதிதாக கோவிட் அலைகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்க நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா, அந்த இலக்கை எட்ட, 12 - 17 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.


latest tamil news


இதுகுறித்து, தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது: நாட்டின் 70 சதவீத மக்களுக்கு வரும் டிச., மாதத்துக்குள் கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் 12 - 17 வயதினருக்கு அடுத்த வாரம் முதல் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே 12 - 17 வயதினருக்குச் செலுத்தப்படும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தற்போது 2வது டோஸ் செலுத்தப் போவதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-அக்-202118:15:07 IST Report Abuse
அப்புசாமி தெரிஞ்சுக்கோங்க... எல்லா நாடுகளிலும் இலவசமாத்தான் தடுப்பூசி போடறாங்க. இங்கே மாதிரி யாரும் மெடல் குத்திக்கிறதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X