பொது செய்தி

இந்தியா

13 லட்சத்தில் 1.1 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் மாதிரிகள் மாசடைந்து இருப்பது மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:மத்திய அரசின் குடிநீர் பரிசோதனை மற்றும் ஆய்வுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 13 லட்சம் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு
drinking water, Over 13 lakh drinking water samples, tested under govt programme, 111474 found contaminated, குடிநீர் மாசு, 1 1 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசு, ஆய்வில் அதிர்ச்சித் தகவல், மத்திய அரசு ஆய்வு, ஜல் சக்தி அமைச்சகம்,

புதுடில்லி: நாடு முழுவதும் 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் மாதிரிகள் மாசடைந்து இருப்பது மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
மத்திய அரசின் குடிநீர் பரிசோதனை மற்றும் ஆய்வுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 13 லட்சம் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரும் பரிசோதிக்கப்பட்டது. அவற்றிலும் ஆர்செனிக், ப்ளோரைட், இரும்பு, யுரேனியம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருந்தன.


latest tamil news
நிலத்தில் உரம் தெளிப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் போடுவது, கழிவுகளை கொட்டுவது போன்றவற்றால், நிலத்திலேயே ரசாயனங்கள் கலந்து, இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரிலும் ரசாயனங்கள் கலந்துள்ளன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 13,17,028 குடிநீர் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டதில், 1,11,474 மாதிரிகள் மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளது. மாசடைந்த குடிநீர் மாதிரிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
16-அக்-202119:00:23 IST Report Abuse
T.sthivinayagam நல்ல ஜல் வேண்டும் என்றால் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என்கிற நிலமை வராமல் இருக்க வேண்டும்
Rate this:
Cancel
16-அக்-202117:48:16 IST Report Abuse
அப்புசாமி சும்மாவா... 5 கோடி வீடுகளுக்கு அஞ்சே வருஷத்தில் பைப் போட்டு தண்ணி குடுத்திருக்கோம் ஹைன். மகாராஷ்டிராவில் மட்டும் ரயிலை நிறுத்தி மக்கள் தண்ணி புடிச்சிட்டு போறாங்க ஹைன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X