முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு டெங்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு டெங்கு

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த சில நாட்களாக, உடல்நலப் பிரச்னைகளால் அவதியுற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
மன்மோகன், மன்மோகன்சிங், டெங்கு, டில்லி, எய்ம்ஸ், manmohansingh, Manmohan, Dengue, Delhiaiims, doctors,

புதுடில்லி: முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமரும், காங்., கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், 89, கடந்த சில நாட்களாக, உடல்நலப் பிரச்னைகளால் அவதியுற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் சரியான போதும் 13ம் தேதி மாலை அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடல் பலவீனமடைந்தது; உணவு உண்ண முடியாமல் திரவ உணவை மட்டுமே அவர் எடுத்து வந்தார். இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மன்மோகன் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவரது உடல்நிலையும் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X