ஹரியானா கொலை சம்பவம் : குற்றவாளிக்கு ஏழு நாள் காவல்

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிக்கு அருகே, லக்பிர் சிங், 35, என்ற பஞ்சாபைச் சேர்ந்த தலித் சமூக தொழிலாளி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல், இரும்பு தடுப்பில் தொங்க விடப்பட்டிருந்தது. சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்தகத்தை அவமதித்த குற்றத்திற்காக, அந்த நபரை 'நிஹாங்' எனப்படும் ஆயுதம்
 ஹரியானா  கொலை சம்பவம் : குற்றவாளிக்கு ஏழு நாள் காவல்

ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிக்கு அருகே, லக்பிர் சிங், 35, என்ற பஞ்சாபைச் சேர்ந்த தலித் சமூக தொழிலாளி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல், இரும்பு தடுப்பில் தொங்க விடப்பட்டிருந்தது. சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்தகத்தை அவமதித்த குற்றத்திற்காக, அந்த நபரை 'நிஹாங்' எனப்படும் ஆயுதம் ஏந்திய சீக்கிய அமைப்பினர் கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.


latest tamil news



அந்த கொலையை செய்ததாகக் கூறி, நிஹாங் உறுப்பினரான சரவ்ஜித் சிங் என்பவர், போலீசாரிடம் சரண் அடைந்தார். சரணடைவதற்கு முன், நிருபர்களிடம் சரவ்ஜித் சிங், 'இந்த கொலை செய்ததற்கு நான் வருந்தவில்லை' என தெரிவித்துள்ளார். இந்நிலையில், சரவ்ஜித் சிங்கை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மற்றொரு நபரையும் போலீசர் இன்று (அக்.16) கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
17-அக்-202108:23:32 IST Report Abuse
visu இதுதான் மூட நம்பிக்கையின் உச்சம் ஆனால் நம்ம சொரியார் குரூப் இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்கமாட்டாங்க
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-அக்-202123:29:34 IST Report Abuse
Vena Suna இங்கே உள்ள பிரபல நாஸ்திக தலைவர் பல வருடங்கள் முன்னர் அங்கே போய் கடவுள் இல்லை என்றும் ஆட்கள் வேண்டும் என்றார்.. உடனே அங்கே உள்ள சீக்கியர்கள் ,மரியாதையாக ஊருக்கு கிளம்புடா என்று சொல்ல,பயந்து வந்து விட்டாராம்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-அக்-202121:52:35 IST Report Abuse
sankaseshan நிஹாங் குரூப் பிண்டரன் வாலெ ஆதரவு காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்தவர்கள் குருமா இதுக்கெல்லாம் வாயை திறக்கmattaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X