பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 16, 2021
Share
Advertisement
அக்., 17, 1892கோவையில் 1892, அக்., 17ல் பிறந்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார். வழக்கறிஞரான இவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். நீதி கட்சி தலைவராக செயலாற்றினார்.கோவை நகர் மன்ற துணைத் தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார். தமிழ் மேல் அளவற்ற பற்று கொண்டிருந்தார். 'தமிழ் இசை' இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பின்,

இதே நாளில் அன்று

அக்., 17, 1892

கோவையில் 1892, அக்., 17ல் பிறந்தவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார். வழக்கறிஞரான இவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். நீதி கட்சி தலைவராக செயலாற்றினார்.
கோவை நகர் மன்ற துணைத் தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார். தமிழ் மேல் அளவற்ற பற்று கொண்டிருந்தார். 'தமிழ் இசை' இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பின், நாட்டின் முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று, தன் பதவியை துறந்தார். பார்லிமென்டின் முதல் தமிழ்
சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர். 1951-ல் அண்ணாமலை பல்கலை துணைவேந்தராக பணியாற்றினார். 1952ல் சென்னை சட்ட மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டார். 1953 மே 5ல் தன், 61வது வயதில் காலமானார்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X