சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை

Added : அக் 16, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெங்களூரு:சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து விடுதலையானார். முன் கூட்டியே விடுதலைசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற சசிகலா
 சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை

பெங்களூரு:சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து விடுதலையானார்.


முன் கூட்டியே விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அபராதத்தை செலுத்தி உரிய நேரத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர்.அபராத தொகையான, 10 கோடி ரூபாயை செலுத்தாத காரணத்தால் சுதாகரனுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதாகி 123 நாட்கள் விசாரணை கைதியாக தான் இருந்ததால், முன்கூட்டியே விடுதலை செய்யும்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.


உற்சாக வரவேற்பு



இதையடுத்து 83 நாட்கள் முன்கூட்டியே விடுதலையாக அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2022ல் விடுதலை ஆக வேண்டிய சுதாகரன், மூன்று மாதங்கள் முன் கூட்டியே விடுதலை ஆனார். அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரத்தில், 10 ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு, சிறையிலிருந்து வெளியில் வந்தார். சிறைவாசம் காரணமாக சுதாகரன் உடல் மெலிந்து காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்தும், மலர் துாவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-அக்-202103:31:02 IST Report Abuse
meenakshisundaram ''எல்லோரும் கேட்டுக்கோங்கோ -தியாக தலைவன் (?) விடுதலை
Rate this:
Cancel
RG RG - Chennai,இந்தியா
22-அக்-202120:05:30 IST Report Abuse
RG RG இவரு கல்யாணம் ஊர்வலம் மவுண்ட் ரோடு ல நடந்தது . சி எம் வளர்ப்பு மகன் இவனுக்கு என்ன கவலை னு நினைச்சோம் . எதுவும் கடந்து தான் போகும் போல ..
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
21-அக்-202114:03:54 IST Report Abuse
R MANIVANNAN தேச விடுதலைக்காஹ் சிறை சென்று வந்தவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X