வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக அட்டூழியம்! 2 பேர் கொலை; 80க்கும் அதிகமான கோவில்கள் சேதம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
டாக்கா :வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. ௧௨ மாவட்டங்களில் கலவரம் பரவியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. இதுவரையிலான வன்முறைக்கு ஹிந்துக்கள் இருவர் பலியாகிவிட்டனர். ௧௫௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ௮௦க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது போல் நம் அண்டை
வங்கதேசம், ஹிந்துக்கள், 2 பேர் கொலை; கோவில்கள் சேதம்

டாக்கா :வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. ௧௨ மாவட்டங்களில் கலவரம் பரவியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. இதுவரையிலான வன்முறைக்கு ஹிந்துக்கள் இருவர் பலியாகிவிட்டனர். ௧௫௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ௮௦க்கும் அதிகமான கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.


மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது போல் நம் அண்டை நாடான வங்கதேசத்திலும், அங்கு வசிக்கும் சிறுபான்மை ஹிந்துக்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசத்தில் மொத்த மக்கள் தொகையில் ௧௦ சதவீதத்துக்கும் அதிகமான ஹிந்துக்கள் உள்ளனர்.

இந்த ஆண்டும் துர்கா பூஜையை முன்னிட்டு, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பந்தல்கள் அமைத்து, துர்கா சிலைகளை பிரதிஷ்டை செய்து ஹிந்துக்கள் வழிபட்டனர்.


இந்தியா கண்டனம்இந்நிலையில் கொமில்லா நகரில் நடந்த துர்கா பூஜை விழாவில் இஸ்லாமியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் 13ம் தேதி வேகமாக பரவியது. இதையடுத்து கொமில்லா நகரில் துர்கா பூஜை நடந்து கொண்டிருந்த பந்தலுக்கு, ௧௦௦க்கும் அதிகமான வன்முறையாளர்கள் திரண்டு வந்தனர்.


பந்தலை தகர்த்து துர்கா சிலையை சேதப்படுத்தினர். வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஹிந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ௧௦௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து சந்த்பூர், ஹாஜிகன்ஜ், பெகுலா உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஹிந்து கோவில்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஹாஜிகன்ஜில் கோவில் மீது தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.'துர்கா பூஜை விழாவில் குரான் அவமதிக்கப்படவில்லை. இந்த கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு உள்ளது' என, போலீசார் தெரிவித்தனர்.ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், 'வங்கதேசம் இன நல்லிணக்கத்தின் பூமி. இங்கே அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பதற்றம் அதிகரித்த மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் வங்தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. நவகாளி மாவட்டம் பெகும்கன்ஜ் பகுதியில் உள்ள கோவிலில் துர்கா பூஜையின் இறுதி நாளான நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.


அப்போது ௨௦௦க்கும் அதிகமான வன்முறையாளர்கள் கோவிலுக்குள் அதிரடியாக புகுந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர்; கோவிலையும் சேதப்படுத்தினர்.
இதைத் தடுக்க வந்த கோவில் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அடித்துக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் ஹிந்துக்கள் பலர் காயம் அடைந்தனர். வங்கதேசத்தில் தற்போது ௧௨க்கும் அதிகமான மாவட்டங்களில் வன்முறை பரவியுள்ளது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் உள்ள ௬௪ மாவட்டங்களில் ௩௪ மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, வன்முறையில் ஈடுபடுவோரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை பற்றி ஹிந்து அமைப்பைச் சேர்ந்த கோவிந்த சந்திர பிரமானிக் கூறியதாவது:வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. துர்கா பூஜையை ஹிந்துக்கள் அமைதியாக தான் கொண்டாடினர். இதை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டே வதந்தி பரப்பப்பட்டது.


துாதரகம் பேச்சுகடந்த நான்கு நாள் வன்முறையில் ௧௫௦க்கும் அதிகான ஹிந்துக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிந்துக்களின் பாதுகாப்பை வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நம் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:வங்கதேச வன்முறையை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச அதிகாரிகளை இந்திய துாதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'இஸ்கான்' கோவில் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் நவகாளி மாவட்டத்தில் உள்ள 'இஸ்கான் ' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை சேர்ந்த கோவில் மீதும் நேற்று முன்தினம் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
கோவிலுக்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள், துறவியர், பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். கோவிலை சேதப்படுத்திய வன்முறையாளர்கள், அங்கிருந்த பொருட்களையும் உடைத்து சூறையாடினர்.கோவில் வளாகத்தில் உள்ள குளக்கரையில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவரை தாக்கிய கும்பல், அவரை குளத்தில் துாக்கி வீசியது.
நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. அவர் பெயர் பிராந்த சந்திர தாஸ், ௨௬, என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

'வேடிக்கை பார்க்க வேண்டாம்'

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. வங்கதேச கலவரம் பற்றி திரிணமுல் காங்., செய்தி தொடர்பாளர் குனால் கோஷ் கோல்கட்டாவில் கூறியதாவது:வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை கவலையளிக்கிறது. இந்த வன்முறைக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் நம் பிரதமர் மோடி எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உறுதியாக செயல்பட வேண்டும்.
ஹிந்துக்களின் பாதுகாவலர் என, பா.ஜ., கூறினால் மட்டும் போதாது; அதை செயல்களில் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-அக்-202106:34:29 IST Report Abuse
meenakshisundaram தீவிர வாதம்-முஸ்லீம் மதம் -இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாததாகி விட்டன .இவர்கள் திருந்த வேண்டும் .மற்றவரை வாழ விட மாட்டார்கள் .பங்களாதேஷ் .பாகிஸ்தான் இவை சிறந்த உதாரணங்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-அக்-202117:27:30 IST Report Abuse
DVRR முஸ்லீம் ஒரு தீவிரவாத இயக்கம் மதம் அல்ல. அவர்கள் என்ன ஹிந்து செகுலர் டோலெராண்ட் ஆட்களல்ல அவர்கள் வெறும் தீவிரவாத மனம் கொண்ட முஸ்லிம்கள் மனிதர்களேயல்ல
Rate this:
Desi - Chennai,இந்தியா
17-அக்-202120:02:28 IST Report Abuse
DesiIt is a Cult....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
17-அக்-202115:36:58 IST Report Abuse
a natanasabapathy இங்குள்ள திராவிடர்கள் கண்டனம் தெரிவிக்க வில்லையே ஏன் இதுவே இங்கு சிறுபான்மையினர் தாக்கப்பட்டிருந்தா கோபாலும் குருமாவும் கையேந்தி தோழர்களும் திருட்டு முட்டாள்கள் கழகத்தினரும் போராட்டம் நடத்தி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருப்பார்கள்
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
20-அக்-202120:07:02 IST Report Abuse
SaiIT MAY BE A CULT ஆனாலும் ஆப்கானிஸ்தான் இல்லை பங்களாதேஷ் இவ்வளவு நாளாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் இல்லையே இந்தியாவின் இருபுறமும் இந்த இந்து எதிர்ப்பு கலவரங்கள் திடீரென வெடித்தது ஏனாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X