எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் தடை ஏற்படலாம் எச்சரிக்கை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை

Updated : அக் 17, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுதும் மின் தடை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா பரவல் துவங்கியது முதல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு உட்பட பல சவால்களை சந்தித்து வருகின்றன. தற்போது புதிய சவாலாக நிலக்கரி பற்றாக்குறை பூதாகாரமாக உருவெடுத்து உள்ளது. நாட்டின் மொத்த மின்
நிலக்கரி தட்டுப்பாடு, மின் தடை,எச்சரிக்கை! நடவடிக்கை

நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுதும் மின் தடை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா பரவல் துவங்கியது முதல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு உட்பட பல சவால்களை சந்தித்து வருகின்றன. தற்போது புதிய சவாலாக நிலக்கரி பற்றாக்குறை பூதாகாரமாக உருவெடுத்து உள்ளது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் வாயிலாகவே கிடைக்கிறது. அனல் மின் நிலையங்கள் தான் இந்தியாவின் மின்சார தேவைக்கு பெருமளவில் ஆதாரங்களாக உள்ளன.
சமாளிப்பது வழக்கம்பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் ஆண்டுதோறும் 60 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதுதவிர 40 கோடி டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து வாங்குகிறோம். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். எப்போதும் 14 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருக்கும். ஆனால், தற்போது மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள நிலக்கரி கையிருப்பு 72 லட்சம் டன்; இது, நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இந்தியா முழுக்க இருக்கும் 135 அனல் மின் நிலையங்களில் அபாயகரமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு குறைந்துஉள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி போன்ற மாநிலங்களில் மின் வெட்டு அபாயம் நிலவுகிறது. இப்படி பற்றாக்குறை ஏற்படும்போது இறக்குமதியை அதிகமாக்கியோ, உள்நாட்டு உற்பத்தியை பெருக்கியோ, நிலைமையை சமாளிப்பது வழக்கம். இப்போதும் மத்திய அரசு அதைத் தான் செய்து வருகிறது. ஆனால் இது எத்தனை நாட்களுக்கு பலன் தரும் என தெரியவில்லை. சர்வதேச சந்தையில் நிலக்கரிக்கு தட்டுப்பாடும், விலை உயர்வும் நிலவும் சூழ்நிலையில், பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா'வும் விலையை உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களை இந்த நடவடிக்கை பெரிய கடன் சுமையில் தள்ளும்.

இந்த பற்றாக்குறைக்கு மழையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நாட்டில் அதிக அளவில் கன மழை பெய்ததன் காரணமாகவே நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாக தொழிற்சாலைகள் உற்பத்தியை அதிகரித்து உள்ளன.


அரசு நடவடிக்கைஇதனால் மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த மின் தேவையை ஈடுகட்ட, போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை.பருவ மழைக் காலம் அதிகரித்ததால், சுரங்கங்களில் இருந்து அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக இறக்குமதி நிலக்கரியின் விலையும் அதிகரித்து உள்ளது.
இதனால், இந்தியாவின் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டிலேயே நிலக்கரி வாங்குவதும், பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது. இறக்குமதி நிலக்கரி வாயிலாக, மின் உற்பத்தி செய்த நிறுவனங்கள் மின் உற்பத்தி அளவை இப்போது குறைத்து விட்டன.

வழக்கம் போல் இந்த விவகாரத்திலும் மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பழிபோடுவது தொடர்கிறது. 'நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை; மின் தடை ஏற்படாது' என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே தலையிட்டு, மாநில மின் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார்.அதனால், நிலைமை கைமீறி போகாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்.

ஆனால் இந்த பிரச்னையை இப்போது சமாளித்தாலும், வரும் ஆண்டுகளிலும் மீண்டும் எழும் என்பது உறுதி. நிலக்கரிக்கு பிரச்னை ஏற்பட்டால் மின் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
அதனால், இந்த பிரச்னையை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டு, மின் உற்பத்திக்கு நிலக்கரியை பெரிதும் சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கை எடுப்பது தான் சிறந்த வழி.


மாற்று வழிகள்சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான மின் உற்பத்திக்கு, மத்திய அரசு இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது. ௨௦௩௦ம் ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தியில் ௪௦ சதவீதத்தை, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி வாயிலாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மின் வினியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் பாக்கி வைத்துள்ளன. அதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.அப்போது தான் 2030ல் மின்சார உற்பத்திக்கு நிலக்கரியை சார்ந்திருப்பதை வெகுவாக குறைக்க முடியும். பொருளாதாரமும் சீரான வளர்ச்சி பெறும்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dawamani - Kajang,மலேஷியா
18-அக்-202115:53:50 IST Report Abuse
Dawamani இந்நாட்டில் எல்லாவற்றிர்க்கும் பிரச்னை பிள்ளை உற்பத்தியை தவிற
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-202122:34:25 IST Report Abuse
Vittalanand உண்மையாக மின் தட்டுப்பாட்டை நீக்க வேண்டுமெனில், தமோழ்நாட்டில் அணு மினிலயம் அமைக்க வேண்டும். கூடங்குளம் பாவாடைகளினால் நாசமாகி விட்டது. அவர்களை புறம் தள்ளி அணு மின் நிலையம் அமைக்கவேண்டும்
Rate this:
Cancel
N.G.RAMAN - MADURAI,இந்தியா
17-அக்-202118:33:38 IST Report Abuse
N.G.RAMAN அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மின்சாரம் பயன்படுத்தபட வேண்டும். ஏ சி பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்தால் 70 முதல் 80 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். உலகை வெப்பமயமாக்குவது துவங்கி உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது வரை ஏ சி யால் பாதிப்பே அதிகம். ஏ சி பயன்படுத்த தடை விதித்தால் கூட தவறில்லை. மின்சார பற்றாக்குறையை தவிர்க்க இது மட்டுமே உடனடி தீர்வாக இருக்கும். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X