காஷ்மீரில் இன்று 2 வீரர்கள் உடல்கள் மீட்பு: இதுவரை 9 வீரர்கள் வீரமரணம்:

Updated : அக் 16, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் இன்று (அக்.16) பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, மாயமான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் சமீபத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில்,
 காஷ்மீர்,2 வீரர்கள் உடல்கள் மீட்பு:,9 வீரர்கள் வீரமரணம்:

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் இன்று (அக்.16) பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, மாயமான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் சமீபத்தில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினர். ஆறாவது நாளாக இன்றும் (அக்.16) அந்த தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது, மாயமான இரண்டு வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.


latest tamil news






இரு பயங்கரவாதிகள் என்கவுன்டர்



பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது புல்வாமா மாவட்டத்தில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் முக்கிய தலைவரான உமர் முஷ்தக் காண்டே உட்பட இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


அப்பாவி மக்கள் பலி



இதற்கிடையே ஸ்ரீநகரில் பானிபூரி வியாபாரியான அரவிந்த் குமார் ஷா என்ற பீஹாரைச் சேர்ந்தவரையும், புல்வாமாவில் தச்சராக பணிபுரிந்து வந்த சாகிர் அகமது என்ற, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
17-அக்-202114:12:11 IST Report Abuse
Guna அப்பாவி மக்களைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் வீராப்போடு துவேஷ விதைகளை விதைத்த அரசுக்கு அறுவடை எவ்வளவோ
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-அக்-202107:10:03 IST Report Abuse
Milirvan இறந்த ஒன்பது வீரர்களின் பெயரிலும் சிங் என்றிப்பது ஒரு மாதிரி இருக்கிறது.. மற்ற மாநிலத்தவர்கள், பாதுகாப்பு, தேடுதல் பணியில் இல்லையா..? இதுவே தமிழகத்தவர்கள் என்றிருந்தால் திராவிஷமும், சிறுத்தை குட்டிகளும், டுமீளர்களும் என்னவெல்லாம் கம்பி கட்டியிருப்பார்கள்..?
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
17-அக்-202105:35:53 IST Report Abuse
GANESUN //தேர்தல் வரும் பின்னே// நீங்க தேர்தல்ல நிக்கற சமயத்தில குடும்பத்தில் கற்பழிப்போ,. கொலையோ நடந்தா இதையே சொல்லி ஓட்டு கேட்பீங்களா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X