பட்டாசு தடையை நீக்க பன்னீர்செல்வம் யோசனை | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு தடையை நீக்க பன்னீர்செல்வம் யோசனை

Updated : அக் 18, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை:டில்லி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி, அம் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிகஅளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும் தான் நினைவிற்கு வருகின்றன. இதன் வாயிலாக,
பட்டாசு தடை, பன்னீர்செல்வம் யோசனை

சென்னை:டில்லி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி, அம் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தீபாவளி என்றாலே பட்டாசும், அது அதிகஅளவில் தயாரிக்கப்படும் இடமான சிவகாசியும் தான் நினைவிற்கு வருகின்றன. இதன் வாயிலாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறுவதுடன், தமிழக பொருளாதாரமும் மேம்படுகிறது. தற்போது, அந்த தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டு இருப்பது, கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த ஆண்டு, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.தமிழக முதல்வரும், மேற்கண்ட மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.ஆனால், இதற்கு அந்த மாநிலங்கள் செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.

எனவே, முதல்வர் உடனே தலையிட்டு, சிவகாசியில் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்கப் படுகின்றன என்பதையும், காற்று மாசு ஏற்படாது என்பதையும் தொலைபேசியிலோ அல்லது அமைச்சர்களை அனுப்பியோ, உண்மை நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.அம்மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X