அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., சமாதியில் சசிகலா அஞ்சலி : பாரத்தை இறக்கி வைத்ததாக கண்ணீர்

Updated : அக் 18, 2021 | Added : அக் 16, 2021 | கருத்துகள் (31+ 61)
Share
Advertisement
சென்னை : மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில், அவரது தோழி சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, சென்னை, தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில், ஜன., முதல் தங்கியுள்ளார். முதல் முறையாக நேற்று காலை, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவருடன் ஏராளமான ஆதரவாளர்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். ஜெயலலிதா
ஜெ., சமாதி, சசிகலா, கண்ணீர்

சென்னை : மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில், அவரது தோழி சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, சென்னை, தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில், ஜன., முதல் தங்கியுள்ளார்.

முதல் முறையாக நேற்று காலை, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தார். அவருடன் ஏராளமான ஆதரவாளர்கள் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில், சில நிமிடங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் கூறியதாவது: என் வயதில் முக்கால் பகுதி, ஜெயலலிதாவுடன் தான் இருந்தேன். ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும், தொண்டர்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்ந்தனர். நான் ஐந்து ஆண்டுகளாக, இங்கு ஏன் வரவில்லை என்பது தொண்டர்களுக்கு தெரியும்.

என் மனதில் ஐந்து ஆண்டுகளாக இருந்த பாரத்தை, ஜெயலலிதாவிடம் இன்று இறக்கி வைத்து விட்டேன். அ.தி.மு.க.,விற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று, ஜெயலலிதாவிடம் சொல்லி விட்டேன். இனி, அ.தி.மு.க.,வையும், தொண்டர்களையும், ஜெயலலிதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், இங்கிருந்து புறப்படுகிறேன்.இவ்வாறு சசிகலா கூறினார்.

இதற்கிடையே, மெரினாவில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சசிகலா செல்ல இருப்பதாக தகவல் பரவியது.
அவரது வருகையை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் ஏற்பாட்டில், ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால், சசிகலா அங்கு செல்லாமல், தன் வீட்டிற்கு போய் விட்டார்.

சசிகலா அஞ்சலி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள், ஜெயலலிதா நினைவிடம் வந்து செல்கின்றனர். அவர்களில் சசிகலாவும் ஒருவர். இதனால், எந்த தாக்கமும் ஏற்படாது.
அ.தி.மு.க.,வில் சசிகலாவிற்கு இடமில்லை. தினகரன் வேண்டுமானால், அ.ம.மு.க.,வில் ஏதாவது பதவி தரலாம்.

அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த, எந்த உரிமையும் சசிகலாவிற்கு கிடையாது. சட்டத்தை மீறுவது மிகப் பெரிய தவறு. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
யானை பலம் கொண்ட அ.தி.மு.க.,வை, சசிகலா என்ற ஒரு கொசு தாங்கி கொண்டிருப்பதாக கூறுவது, நகைச்சுவையாக உள்ளது. அவரது நடிப்பிற்கு, 'ஆஸ்கர்' விருது தரலாம். கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு; குடல் வற்றி செத்து போன கதையாக, சசிகலா நடவடிக்கை உள்ளது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31+ 61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-அக்-202122:38:10 IST Report Abuse
Vijay D Ratnam திருக்குவளைக்காரன் திருவாரூர் ஜங்ஷன்லேர்ந்து திருட்டு ரயிலேறி கக்கூஸ்ல ஒக்காந்துக்கிட்டே மெட்றாஸ் பட்டணம் வந்தது போல அல்லாமல் திருக்குவளைக்காரன் முன்னின்று கல்யாணம் செய்துவைத்த மன்னார்குடியம்மா அதே திருவாரூர் ஜங்ஷன்லேர்ந்து புருசனோட தேர்ட் க்ளாஸ் டிக்கட் எடுத்துக்கினு வந்தது. திருக்குவளைக்காரனையே மிஞ்சப்பார்த்தது. ஆனா சொதப்பி கோர்ட், ஜெயில், பெயில், வாய்தா என்று சிக்கி சின்னாபின்னமானாலும் கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டது. இப்போ அதே திருக்குவளையான் மவனுக்கு அல்லக்கையாக செயல்பட்டு அதிமுக வாக்குகளை லைட்டாக டேமேஜ் செய்துகொண்டு இருக்குது. இந்தா உள்ளாட்சி தேர்தலும் முடிஞ்சிடிச்சி, மிச்ச காலத்தையாவது கோயில் குளம் என்று வாழ்வதை விட்டுட்டு அதிமுகவை அழிக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கிது.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
17-அக்-202120:29:30 IST Report Abuse
Nagercoil Suresh கொள்ளை அடித்துக்கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கெல்லாம் ஒரு நாளும் மவுசு கிடையாது, இவரை பொறுத்தமட்டில் வாழ்க்கையில் எஞ்சிய நாட்களை அமைதியாக ஒதுங்கி இருந்து கழிப்பதே சிறந்த செயல்...ஜெயக்குமார் மீனவ அமைச்சராக இருந்ததினால் கடல் சார்ந்த கவிதைகளை சும்மா விட்டு விளாசுகிறார், இருந்தாலும் காலில் விழுந்து கும்பிட்ட தலைவியை இப்படியெல்லாம் பேசலாமா?
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
17-அக்-202116:25:42 IST Report Abuse
sankar பிரபாகரன் அவர்களே. ஜெயாவின் பெயர் கெட்டது சசியால் தான் என்பது ஊர் உலகம் அறிந்த உண்மை. இது ஜெயாவிற்கும் தெரியாமல் இருக்குமா? பலமுறை பட்டபின்பு கூட சுயபுத்தியுடன் சற்றும் சிந்திக்காமல் மீண்டும் மீண்டும் சசியை சேர்த்து கொண்டது ஏன். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X