சொத்து குவிப்பு வழக்கில் கைதான சுதாகரன் தண்டனை முடிந்து விடுதலை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சுதாகரன் தண்டனை முடிந்து விடுதலை

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (26)
Share
பெங்களூரு-சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுதலையானார்.முன்கூட்டியே விடுதலைசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற

பெங்களூரு-சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுதலையானார்.



latest tamil news





முன்கூட்டியே விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அபராதத்தை செலுத்தி உரிய நேரத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர்.

அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்தாத காரணத்தால் சுதாகரனுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதாகி 123 நாட்கள் விசாரணை கைதியாக, தான் இருந்ததால் முன்கூட்டியே விடுதலை செய்யும்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil news



உற்சாக வரவேற்பு

இதையடுத்து 83 நாட்கள் முன்கூட்டியே விடுதலையாக அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2022ல் விடுதலை ஆக வேண்டிய சுதாகரன், மூன்று மாதங்கள் முன் கூட்டியே நேற்று விடுதலை ஆனார். அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரத்தில், 10 ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு, நேற்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்தார். சிறைவாசம் காரணமாக சுதாகரன் உடல் மெலிந்து காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்தும், மலர் துாவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X