அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சுதாகரன் தண்டனை முடிந்து விடுதலை

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
பெங்களூரு-சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுதலையானார்.முன்கூட்டியே விடுதலைசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற

பெங்களூரு-சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிவடைந்து, சசிகலா உறவினரான சுதாகரன், பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து நேற்று விடுதலையானார்.



latest tamil news





முன்கூட்டியே விடுதலை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா உறவினர் சுதாகரன், 2017 பிப்., 14ல் கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில், தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அபராதத்தை செலுத்தி உரிய நேரத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர்.

அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்தாத காரணத்தால் சுதாகரனுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே கைதாகி 123 நாட்கள் விசாரணை கைதியாக, தான் இருந்ததால் முன்கூட்டியே விடுதலை செய்யும்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.


latest tamil news



உற்சாக வரவேற்பு

இதையடுத்து 83 நாட்கள் முன்கூட்டியே விடுதலையாக அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2022ல் விடுதலை ஆக வேண்டிய சுதாகரன், மூன்று மாதங்கள் முன் கூட்டியே நேற்று விடுதலை ஆனார். அபராத தொகையான 10 கோடியே 10 ஆயிரத்தில், 10 ஆயிரம் ரூபாயை மட்டும் செலுத்தி விட்டு, நேற்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்தார். சிறைவாசம் காரணமாக சுதாகரன் உடல் மெலிந்து காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்தும், மலர் துாவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
21-அக்-202112:16:35 IST Report Abuse
Hari இவர் புனிதனாகிவிட்டார்,ஆனால் 2ஜி ,3ஜி எப்போது புனிதம் அடைவார்கள். நிறைய ஜி க்கள் இன்னும் புண்ணியம் தேடி கோயில் கோயிலாக நாயிறும் விடாமல் அலைகிறார்கள் அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் புண்ணியம் கிடைக்குமா ஒருபோதும் கிடைக்காது ,உப்பை தின்னவ தண்ணீர் குடிப்பான் சிலர் சற்று நேரம் கழித்து குடிப்பார்கள்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
20-அக்-202111:10:28 IST Report Abuse
sankar ஜெயலலிஹா ஒர் அவசரக்கார பெண் என்பதும், தடாலென்று எடுத்து படக் என்று கவிழ்க்கும் லேடி. சற்றும் சுயசிந்தனை இல்லமல் 27 வயது கொண்டவனை வளர்ப்புமகன் என்று ஊரறிய ஆடம்பர டாம்பீக கல்யாணம் செதுவைத்து. சிஆண்டுகள் கழித்து அவனை கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளி சிவாஜியின் குடும்பத்துக்கு தீராத அவமானத்தை தேடி தந்தவர். இதன் காரணமாகவே சிவாஜி சீக்கிரம் போய்விட்டர். இவன் சில கெட்ட பழக்கத்துக்கு ஆளகிவிட்டான் என பத்திரிகை செய்தி சொல்கிறது.
Rate this:
Cancel
JS -  ( Posted via: Dinamalar Android App )
17-அக்-202118:08:35 IST Report Abuse
JS PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X